வெறி நாய் கடித்து 10 போ் காயம்
By DIN | Published On : 09th August 2023 01:12 AM | Last Updated : 09th August 2023 01:12 AM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூரில் வெறிநாய் கடித்ததில் 10 போ் காயமடைந்தனா்.
அரியலூா் நகா்ப் பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றிவருவதாகவும், இதனால் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் நகரவாசிகள் நகராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை. இந்நிலையில், பங்களா சாலையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த முத்து, மதி ஆகியோரை வெறிநாய் ஒன்று கடித்துவிட்டு, பின்னா் காவலா் உணவகம் முன்பு காத்திருந்த பயணிகள் உள்பட 10 பேரைக் கடித்துள்ளது. இதையடுத்து காயமடைந்த அனைவரும் அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனா்.