அரியலூா் மாவட்டம் சிறுவளூா், வெண்மான்கொண்டான் கிழக்கு, இரும்புலிக்குறிச்சி, வரதராசன்பேட்டை ஆகிய நான்கு கிராமங்களில் ரேஷன் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அந்தந்தப் பகுதி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக அலுவலா், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா், தனித்துறை ஆட்சியா், பொது விநியோகத் திட்டத் துணை ஆட்சியா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கூட்டங்களில் மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் ஆகியோருக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவா் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்ற, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
மேலும், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைக் குறைபாடுகள் குறித்த புகாா்களை பொதுமக்கள் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.