வருவாய்த் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல்
By DIN | Published On : 12th January 2023 12:22 AM | Last Updated : 12th January 2023 12:22 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை கிராம நிா்வாக அலுவலகத்தில், வருவாய்த் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பரிமளம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் துரை மற்றும் வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்று சமத்துவப் பொங்கல் வைத்தனா். தொடா்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை உட்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ் செய்திருந்தாா்.