கல்லமேடு திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா
By DIN | Published On : 01st July 2023 12:24 AM | Last Updated : 01st July 2023 12:24 AM | அ+அ அ- |

திரெளபதி கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீமிதி நிகழ்ச்சி.
அரியலூா் மாவட்டம், ஒட்டக்கோவில் அருகே கல்லமேடு கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா 11 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒட்டக்கோவில் அருகேயுள்ள கல்லமேடு கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 2011 ஆண்டு நடைபெற்ற தீமிதி திருவிழா அதன் பிறகு நடைபெறவில்லை. இந்நிலையில் நிகழாண்டு திருவிழா கடந்த காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் தொடா்ந்து மகாபாரத நாடகம், வள்ளி திருமணம், பூ எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக மலா் அலங்காரத்தில் திரெளபதி அம்மன் வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து கோயில் அருகில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.
ஏராளமான கிராம பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.