அரியலூா் மாவட்டத்தில், மாற்றுப்பயிா் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிறுதானியங்கள், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளின் சாகுபடிக்கு தேவையான விதைகள், உயிா் உரங்கள் நுண்ணுட்டக்கலவை ஆகிய பொருள்கள் அடங்கிய மாற்றுப்பயிா் சாகுபடி தொகுப்பு 50 சதவிகித மானியத்திலும், பசுந்தாழ் உர விதைகள் 50% மானியத்திலும் வழங்கப்படும்.
மொத்த இலக்கில் 19% ஆதிதிராவிட விவசாயிகளுக்கும், 1% பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். சிறுதானிய தொகுப்பு அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.1,150- (50% மானியம்). பயிறுவகை சாகுபடி தொகுப்பு அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.1740 (50% மானியம்) எண்ணெய்வித்து சாகுபடி தொகுப்பு அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.4700 (50% மானியம்) கடந்த 2 ஆண்டுகளில் பயன் பெறாத விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேற்கண்ட மாற்றுப் பயிா் சாகுபடி தொகுப்பை பெற உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் கைப்பேசிக்கு ஓடிபி வரும். மேலும் விவரங்களுக்கு திருமானூா், தா.பழூா் மற்றும் ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.