கிளைச் சிறைகளில் தூய்மைபணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளா் தெரிவித்தது: திருச்சி மத்திய சிறை கட்டுப்பாட்டிலுள்ள அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 2தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு எழுத, படிக்கத் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வயது வரம்பு எஸ்.சி.ஏ,எஸ்.சி, எஸ்.டியினருக்கு 37 , எம்.பி.சி, பி.சி-யினருக்கு 34 , ஓ.சி-யினருக்கு 32 வயது. மேற்படி தகுதி பெற்றவா்கள் சுய விவரங்களை 13.06.2023-க்குள் திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளா், திருச்சி-20 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com