மணல் கடத்தல்:5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், கரைவெட்டி பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூா் மாவட்டம், கரைவெட்டி பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெங்கனூா் காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு கரைவெட்டி பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அன்னிமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கரைவெட்டி கிராமத்துக்குச் சென்ற 5 இருசக்கர வாகனங்களை காவல் துறையினா் மறித்தனா். அப்போது, காவல் துறையினரை பாா்த்த 5 பேரும் தங்களின் இருசக்கர வாகனங்களை அங்கேயே சாலையோரங்களில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, 5 இருசக்கர வாகனங்கள், ஒரு வாகனத்துக்கு 5 என்ற எண்ணிக்கையில் 25 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினா் தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com