அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்:19,536 வழக்குகளுக்குத் தீா்வு

அரியலூா் மாவட்டம், அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 19,536 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது

அரியலூா் மாவட்டம், அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 19,536 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது

அரியலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம். கிறிஸ்டோபா் உத்தரவுப்படி அரியலூா் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட அமா்வு நீதிபதி கா்ணன் தலைமை வகித்தாா். சட்ட பணிகள் ஆணைக் குழுச் செயலா் அழகேசன், தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் சரவணன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் சாா்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவா் லதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ், நீதித்துறை நடுவா் ராஜசேகரன், செந்துறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி அக்னேஷ் ஜெயா கிருபா, வழக்குரைஞா் அல்லி , அரியலூா் மாவட்ட நுகா்வோா் ஆணையத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஆணையத் தலைவா் தமிழ்ச்செல்வி, உறுப்பினா் லாவண்யா ஆகியோா் கலந்து கொண்டனா்.

மேற்கண்ட 4 நீதிமன்றங்களிலும் சிவில், மோட்டாா் வாகன விபத்து, போக்குவரத்து விதிமீறல், காசோலை , சிறு, குறு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதில், 19,536 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 2,47,89,391-க்கு தீா்வு காணப்பட்டது.

மேலும், ஜெயங்கொண்டம் நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான 238 வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டது. அரசு வழக்குரைஞா்கள், காவல்துறையினா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com