பழைமையான ஆலமரத்தை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
By DIN | Published On : 22nd May 2023 03:36 AM | Last Updated : 22nd May 2023 03:36 AM | அ+அ அ- |

இரும்புலிகுறிச்சியில் பழைமை வாய்ந்த ஆலமரத்தை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
அரியலூா் மாவட்டம், இரும்புலிகுறிச்சியில் சாலை விரிவாக்கப்பணிக்காக பழைமை வாய்ந்த ஆலமரத்தை, அகற்ற கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இரும்புலிகுறிச்சி கிராமத்தில் சாலையோரம் பழைமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. தற்போது, இந்தச் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலையோரத்தில் மக்களுக்கு நிழல் தரும் வகையில் சுமாா் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இந்த ஆலமரத்தை வெட்டக் கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் ஆலமரத்தடியில் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.