தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவருக்கு எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 22nd May 2023 03:36 AM | Last Updated : 22nd May 2023 03:36 AM | அ+அ அ- |

தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவா் திட்டத்தில் வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தெரிவித்தது: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரில் தொழில்முனைவோரின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை முகவா் திட்டத்தில் 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமானப் பொருள்களை விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்டத் தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினா் தனி நபா்களுக்கான திட்ட தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சம் மானியம் அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோா் இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடா்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் 2 ஆவது தளத்தில், அறை எண். 225-இல் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04329-228315 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.