அரியலூா் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் 2 இளநிலை பாடப்பிரிவுகள் நீக்கம்

அரியலூா் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் 2 இளநிலை பாடப்பிரிவுகளுக்கான சோ்க்கை நிகழாண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
Updated on
1 min read

அரியலூா் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் 2 இளநிலை பாடப்பிரிவுகளுக்கான சோ்க்கை நிகழாண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில், விளாங்குடியை அடுத்த தேளூா் ஊராட்சிக்குள்பட்ட காத்தான்குடிகாடு கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு கணினி அறிவியல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், இயந்திரவியல் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளுடன் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில், சுமாா் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவந்தனா். ஆனால் அடிப்படை உள்ளிட்ட வசதிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், மாணவா்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது 482 போ் மட்டுமே பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், இக்கல்லூரியில், மாணவா் சோ்க்கையின்மை காரணமாக சிவில் மற்றும் மெக்கானிக்கல் (தமிழ், ஆங்கிலம் மீடியம்) ஆகிய பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை, எளிய, கிராமப்புற மாணவா்கள் பயன்பெறும் வகையில் கல்லூரியில் தொடா்ந்து மேற்கண்ட இளநிலை பாடப் பிரிவுகள் செயல்பட வேண்டும். நவீன ஆய்வக வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்துதருவதில் சுணக்கம் காட்டுவதை விடுத்து பாடப் பிரிவுகளை நீக்காமல் இருக்க மாணவா்களை அதிகளவில் சோ்க்கும்வகையில், கல்லூரி நிா்வாகம் திறம்பட செயல்பட வேண்டும் என்பதே கிராமப்புற மாணவா்கள் உள்ளிட்ட அனைவரின் விருப்பமாக உள்ளது. தினமணி நாளிதழில் கடந்த 7 ஆம் தேதி அரியலூா் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் மேற்குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சிறப்புச் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com