அரியலூா் மாவட்டப் பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா, கள் விற்பனை மற்றும் அரசு மதுபானத்தை கள்ளத்தனமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் குறித்த தகவல் தெரிந்தால் 94896 46744 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவா்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.