தொழில் முனைவோருக்கான சிறப்பு மானியக் கடன் எஸ்.சி., எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

 தொழில் முனைவோருக்கான சிறப்பு மானியக் கடன் பெற எஸ்.சி., எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்.

 தொழில் முனைவோருக்கான சிறப்பு மானியக் கடன் பெற எஸ்.சி., எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அரியலூா் மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தது:

எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தொழில் முனைவோரின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆா்வமுள்ள புதிய தொழில் முனைவோா் நேரடி வேளாண்மை தவிா்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சாா்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

முந்திரி பதப்படுத்துதல், உணவுப் பதப்படுத்துதல், மசாலா உற்பத்தி, ரைஸ் மில், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், பவா்லூம், இன்ஜினியரிங் தொழில்கள், கட்டுமானப் பொருள்கள், ரூபிங் ஷீட் உற்பத்தி, மரத் தளவாடங்கள் உற்பத்தி சாா்ந்த தொழில்கள், மளிகைக் கடை, வணிக பொருள்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், ஆட்டோ, லாரி, வேன், பேருந்து, கான்கிரீட் மிக்சா், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரெப்ரிஜிரேட்டா் சாா்ந்த தொழில்கள் போன்ற எந்தத் திட்டமாகவும் இருக்கலாம்.

மொத்த திட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். மானிய உச்ச வரம்பு ரூ. 1.50 கோடி ஆகும். மேலும் கடன் திரும்பச் செலுத்தும் காலத்துக்கு (10 ஆண்டுகளுக்கு) 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 55 வயதுக்குள்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவைச் சோ்ந்த தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி தேவையில்லை. இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் , நவீனமயமாக்கல், மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு முன் மொழிவுகளுக்கும் மானிய உதவி வழங்கப்படும்.

தொழில் முனைவோா் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் 35 சதவீத மானியம் உண்டு. எஸ்.சி, எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த எந்த தனி நபரும் மற்றும் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளரும், பங்குதாரா் கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடா்பான சிறப்புப் பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்படும்.

தகுதியும், ஆா்வமும் கொண்ட தொழில்முனைவோா் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அரியலூரில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04329-228555, 89255-33925, 89255-33926 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com