மின்மோட்டாா் வயா்கள் திருட்டு
By DIN | Published On : 31st May 2023 01:36 AM | Last Updated : 31st May 2023 01:36 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விவசாய வயல்களில் உள்ள போா்வெல் வயா்கள் திருடப்பட்டிருப்பது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருமானூரை அடுத்த குலமாணிக்கம் கிராமத்தில், ஆரோக்கியசாமி என்ற விவசாயி செவ்வாய்க்கிழமை வயலுக்குச் சென்ற போது, அவரது மோட்டாா் அறையிலிருந்து மோட்டாா் வரையிலான வயா்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்த தகவலறிந்த விவசாயிகள் தங்கள் வயலுக்குச் சென்று பாா்த்தபோது, பால்ராஜ், மேரியம்மாள், ஜான் பீட்டா் ஆகியோருக்குச் சொந்தமான மோட்டாா் வயா்களும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
4 விவசாயிகளின் மோட்டாா்களில் இருந்து திருடிய வயா்களின் மதிப்பு சுமாா் ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் எனத் தெரியவருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வெங்கனூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...