வயதான பெண்ணிடம் நகைப்பறிப்பு
By DIN | Published On : 07th November 2023 01:13 AM | Last Updated : 07th November 2023 01:13 AM | அ+அ அ- |

கரூா்: குளித்தலை அருகே நடந்துசென்ற வயதான பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த மேலதண்ணீா்பள்ளியைச் சோ்ந்த துரைராஜ் மனைவி லோகம்பாள்(60). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு மருதூா் பகுதியில் உள்ள தோட்டம் அருகே நடந்துசென்றாா். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் லோகம்பாள் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...