அரியலூா்: அரியலூா் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் இடைவிடாத மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கிநின்றது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பெய்த மழையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வடிக்கால் வசதிகள் இல்லாததால் மழை நீா் தேங்கிநின்றது.
அரியலூா் புதுமாா்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்தி சந்தை, வெள்ளாளத்தெரு, பெரம்பலூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. பெரம்பலூா் தஞ்சாவூா் சாலையில் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு வாகனங்கள் சென்றன.
கீழப்பழுவூா், தா.பழூா், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை,பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டித் தீா்த்தது. இந்தமழையால் மாவட்ட முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவியது. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலன பகுதிகளில் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது.
பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை: தொடா் மழை காரணமாக அரியலூா் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மழை அளவு: மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை.8.30 மணியுடன் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) அரியலூா்-21.02, திருமானூா்-22.6, குருவாடி-39,ஜெயங்கொண்டம்-45, சித்தமல்லி அணை-56, செந்துறை-35.04, ஆண்டிமடம்-49 . ஆகும். இந்தமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷனநிலை காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.