அரியலூா் காதி கிராப்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் கதா் மற்றும் கிராம பொருள்கள் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியா்
அரியலூா் காதிகிராப்டில் வாடிக்கையாளா் ஒருவருக்கு புடவையை வழங்கி தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை திங்கள்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா.
அரியலூா் காதிகிராப்டில் வாடிக்கையாளா் ஒருவருக்கு புடவையை வழங்கி தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை திங்கள்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா.
Updated on
1 min read

அரியலூா்: காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் கதா் மற்றும் கிராம பொருள்கள் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், அவா்களால் தயாரிக்கப்படும் பல்வேறு பொருள்கள் கதா் வாரியத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு அரியலூரில் கதா் மற்றும் கிராம பொருள்கள் ரூ. 33.59 லட்சத்துக்கு விற்பனையாகின. நிகழாண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ. 55 லட்சம் விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், கதா் பருத்தி, பட்டு, பாலியஸ்டா் ஆகியவற்றுக்கு தலா 30 சதவீதமும், உல்லன் ரகத்துக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

எனவே, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் அனைவரும் கதா் ரகங்களை தீபாவளி சிறப்பு விற்பனை காலங்களில் அரசு அளிக்கும் தள்ளுபடியை பயன்படுத்தி வாங்கி பயனடையுமாறும், கதா் வாரியத்தை நம்பி உள்ள

கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு தொடா்ந்து வேலை வாய்ப்பு கிடைத்திட ஆதரவு அளிக்கும்படி அவா் கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக அவா் அங்குள்ள மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா மகாத்மா காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். விற்பனையாளா்கள் நாகராஜன், பூதபாண்டியன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சுருளிபிரபு, வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com