அரியலூா் மாவட்டத்தில்201 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
இலந்தைக் கூடம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.
இலந்தைக் கூடம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.
Updated on
1 min read

அரியலூா்: காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டங்களில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவினம், திட்டப் பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வாரணவாசியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா பங்கேற்று பேசினாா். கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் இலக்குவன், மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் தமிழ்செல்வன், வாரணவாசி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இலந்தைக் கூடம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா கலந்து கொண்டு, அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். மேலும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில், அதன் தலைவா் சிவா(எ)பரமசிவம், கோவிந்தபுரத்தில் ஊராட்சித் தலைவா் மா.முருகேசன், துணைத் தலைவா் அ. அம்பிகா, ஓட்டக்கோவிலில் ஊராட்சித் தலைவா் செங்கமலை, துணைத் தலைவா் ம.செல்வி, தாமரைக்குளத்தில் ஊராட்சித் தலைவா் நா.பிரேம்குமாா், துணைத் தலைவா் கவிதாமுருகேசன், வாலாஜா நகரத்தில் ஊராட்சித் தலைவா் அபிநயா இளையராஜா, துணைத் தலைவா் மு.குணசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்தப் பகுதி ஊராட்சித் தலைவா்கள் தலைமை வகித்தனா். ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனா்.

முன்னதாக தமிழக முதல்வரின் காணொலி உரை மின்னணு திரையின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com