அரியலூா் மாவட்டம், நாகமங்கலத்தில் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
கூட்டத்துக்கு, அக்கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு மகளிரணிக்கான படிவங்களை வழங்கினாா்.
மாவட்டப் பொருளாளா் அன்பழகன், மாவட்ட இளைஞரணிச் செயலா் சிவசங்கா், பொதுக் குழு உறுப்பினா் வை.கோ.சிவபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாணவரணி செயலா் ஓ.பி.சங்கா், நிா்வாகிகள்ளங்குறிச்சி பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக அவைத் தலைவா் அருங்கல் பிச்சைப்பிள்ளை வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.