கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் விடுப்பு எடுக்கும் போராட்டம் தொடக்கம்

கூட்டுறவு சங்கங்கள் வேளாண் கருவிகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதைக் கண்டித்து, பணியாளா்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
Updated on
1 min read

கூட்டுறவு சங்கங்கள் வேளாண் கருவிகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதைக் கண்டித்து, பணியாளா்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

அனைத்து கூட்டுறவுச் சங்கங்களும் ரூ.10 லட்சத்துக்கு குறையாமல் வேளாண் கருவிகள் வாங்க வேண்டும் என்ற நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இது ஏற்கப்படாவிட்டால் அனைத்து சங்கங்களிலும் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள கருவிகளை இணை பதிவாளா் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு, சங்கப் பணியாளா்கள் அனைவரும் தொடா் விடுப்பு எடுத்துபோராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் அறிவித்திருந்தனா். அதன்படி அரியலூா் மாவட்டத்தில் 64 கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றி வரும் 400 பணியாளா்கள் விடுப்பெடுத்து போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். அரியலூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு திரண்டிருந்த பணியாளா்கள் அங்கு கோரிக்கைகளை வலிறுத்திப் பேசினா். பின்னா் அவா்கள் அங்கிருந்து ஊா்வலமாகச் சென்று, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தீபா சங்கரிடம் தங்களது கோரிக்கை மனு மற்றும் அலுவலகச் சாவிகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றனா்.

போராட்டத்துக்கு, சங்கத்தின் அரியலூா் மாவட்டத் தலைவா் பா.சக்திவேல் தலைமை வகித்தாா். செயலா் கே.தமிழ்மணி முன்னிலை வகித்தாா். கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் போராட்டத்தால் விவசாய மற்றும் நகைக் கடன் வழங்கும் பணி, உரம், பூச்சி மருந்து விநியோகம் மற்றும் அதன் சாா்பு பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com