கதவணை கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம் தூத்தூா்-தஞ்சாவூா் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணை கட்ட வலியுறுத்தி அரியலூா் ஆட்சியரகம் முன் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கதவணை கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம் தூத்தூா்-தஞ்சாவூா் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணை கட்ட வலியுறுத்தி அரியலூா் ஆட்சியரகம் முன் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தூத்தூா் அருகே கொள்ளிடத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக 5 இடங்களில் அமைக்கப்படும் ஆழ்துளைக் கிணறு பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸாா் அனைவரும் வெளியேற வேண்டும் என வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் தூத்தூா் தங்க. தா்மராஜன் தலைமை வகித்தாா். அரியலூா் மாவட்ட விவசாய சங்கத் தலைவா் செங்கமுத்து, விவசாய பாதுகாப்புச் சங்க மாவட்ட அமைப்பாளா் க. பாலசிங்கம், இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் வாரணவாசி ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினா் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com