கூடுதல் பேருந்து இயக்கக் கோரி மாணவா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 26th September 2023 01:42 AM | Last Updated : 26th September 2023 01:42 AM | அ+அ அ- |

அரியலூா்: தா.பழூா் அருகேயுள்ள முத்துவாஞ்சேரிக்கு முறையான பேருந்து சேவையும், கூடுதல் பேருந்து இயக்கக் கோரியும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அரியலூா் அண்ணாசிலை அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
முத்துவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள், அரியலூரிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனா். அவா்கள் அனைவரும், பேருந்து மூலம் அரியலூருக்கு வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை அரியலூரில் இருந்து முத்துவாஞ்சேரி கிராமத்துக்கு நீண்ட நேரமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மாலை 6.30 மணியளவில் அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினா், அவ்வழியே வந்த பேருந்தை முத்துவாஞ்சேரி கிராமத்துக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து மாணவா்கள் அந்த பேருந்தில் தங்களது கிராமத்துக்கு ஏறிச் சென்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...