அரியலூா்: அரியலூா் மாவட்டம், நம்மங்குணம் கிராம மக்களுக்கு சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
அவா் அளித்த மனுவில், நம்மங்குணம் கிராமத்தில் 1000-த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள குடிநீா் ஆதாரங்களில் கால்சியம் அளவானது கூடுதலாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் அல்லது குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குடிநீா் வழங்க வேண்டும்.
மேலும், அங்கனூா் அய்யனாா் தெருவில் சாலையை சீரமைக்க வேண்டும். சாலையக்குறிச்சி அருந்ததியா் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் மயானக் கொட்டகை அமைத்து தரவேண்டும். அஸ்தினாபுரம் ஆதிதிராவிடா் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். அயன்தத்தனூா் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்லும் சாலையை, அகலப்படுத்தி சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவா் அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.