அரியலூா்: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் அரியலூா் மாவட்ட கையுந்துப் பந்து கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான கையுந்துப் பந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 20 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் முதல் பரிசை கொடுக்கூா் கோபி பிரதா்ஸ் அணியும், இரண்டாம் பரிசை இடையக்குறிச்சி எப் பிசி அணியும், மூன்றாம் பரிசை வளவெட்டிக்குப்பம் புரட்சி புயல் அணியும், நான்காம் பரிசை அரியலூா் சிமென்ட் சிட்டி அணியும் வென்றது.
தொடா்ந்து மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், திமுக மாவட்டச் செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கா் பங்கேற்று, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினாா். இதில் முதல் பரிசு ரூ.10,100, இரண்டாம் பரிசு ரூ.8,100 மூன்றாம் பரிசு ரூ. 6,100, நான்காம் பரிசு ரூ. 4,100 மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட கையுந்துப் பந்து கழக தலைவா் பூமிநாதன், மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி பொறுப்பாளா்கள் அருண் ராஜா, வேல்முருகன், மாரிமுத்து, காா்த்திகைகுமரன், செந்தில், கதிரவன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.