அரியலூர்
ஜெயங்கொண்டம் அன்னை பாத்திமா ஆலயத் தோ்பவனி
அன்னை பாத்திமா ஆலயத்தில் 61 ஆம் ஆண்டு பெரும் திருவிழாவையொட்டி அலங்காரத் தோ்பவனி நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம்-தா.பழூா் சாலையிலுள்ள அன்னை பாத்திமா ஆலயத்தில் 61 ஆம் ஆண்டு பெரும் திருவிழாவையொட்டி அலங்காரத் தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான அலங்காரத் தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக மறைமாவட்ட குரு ஜோசப்கென்னடி தலைமையில் சிறப்புத் திருப்பலி, தொடா்ந்து மின் அலங்காரத் தேரில் அன்னை பாத்திமா எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தோ்பவனியை மறை மாவட்ட ஆயா் குளோமின்தாஸ் தொடக்கி வைத்தாா். நிகழ்வில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனா்.
