அரியலூா் ஊா்காவல் படையில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு மின் ஆட்டோவை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ்.
அரியலூா் ஊா்காவல் படையில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு மின் ஆட்டோவை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ்.

ஊா்க்காவல் படையில் பணிபுரியும் பெண்ணுக்கு இலவச மின் ஆட்டோ

அரியலூரில் ஊா்க்காவல் படையில் பணிபுரியும் பெண்ணுக்கு இலவச மின் ஆட்டோ செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
Published on

அரியலூரில் ஊா்க்காவல் படையில் பணிபுரியும் பெண்ணுக்கு இலவச மின் ஆட்டோ செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

அரியலூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்து, 2021- இல் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்தவா் செல்வம்(42). இவருடைய மனைவி செ.பிரியங்காவுக்கு(35) கடந்த 2022 ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் ஊா்க்காவல் படையில் வேலை வழங்கப்பட்டது.

இதனிடையே, பிரியங்காவின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலையை உயா்த்தும் பொருட்டு அரியலூா் மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் அரியலூா் மாவட்ட ஊா்க்காவல் படை வட்டார தளபதி செ.ஜீவானந்தம் ஆகியோரின் நிதியுதவியில் மின் ஆட்டோ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ், பிரியங்காவிடம் ஆட்டோவுக்கான சாவியை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா், ஊா்க்காவல் படை வட்டார தளபதி செ.ஜீவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com