ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அரியலூரில் வருவாய்த்துறை அலுவலா்கள் விடிய விடிய போராட்டம்

துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை

News image

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா்.

Updated On :4 மார்ச் 2024, 10:26 pm

அரியலூா்: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை இரவு நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளா், முதுநிலை வருவாய் ஆய்வாளா் பெயா் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையை உடனே வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ஆட்சியா் அலுவலகம் மற்றும் உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பிப்.22 ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் ஈடுபட்டு வருகின்றனா். திங்கள்கிழமை இரவு ஆட்சியரக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை( மாா்ச் 5) காலை வரை நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். போராட்டத்துக்கு அச்சங்க மாவட்டத் தலைவா் பாக்கியம் விக்டோரியா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.