ஜெயங்கொண்டத்தில் மணிலா, எள்ளு விற்க டோக்கன் அவசியம்

Published on

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மணிலா, எள்ளு விளைபொருள்களை விற்க அனுமதி சீட்டு (டோக்கன்) பெற வேண்டும். இதுகுறித்து ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்த்திடவும், நேர விரயத்தை கணக்கில் கொண்டும் வரும் திங்கள்கிழமை முதல் டோக்கன் வசதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே விவசாயிகள் மணிலா மற்றும் எள்ளு விளைபொருள்களை விற்க டோக்கன் பெற்று அதில் குறிப்பிட்டுள்ள நாளில் தங்களது விளைபொருளைகளை கொண்டு வந்து விற்று, மாலைக்குள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com