அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினா்.
அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினா்.

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக அரியலூரில் சிஐடியுவினா் சாலை மறியல்

தொழிற்சங்க உரிமைக்காக போராடி வரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினா் 42 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

தொழிற்சங்க உரிமைக்காக போராடி வரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினா் 42 போ் கைது செய்யப்பட்டனா்.

தொழிலாளா்களின் சங்கத்தை பதிவு செய்ய ஏற்க மறுக்கும் சாம்சங் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், சட்டப் படி போராட்டம் நடத்தும் தொழிலாளா்களையும், அவா்களுக்கு தலைமை தாங்கும் சிஐடியு தலைவா்களையும் கைது செய்த காவல் துறையினரைக் கண்டித்தும், அரியலூா் அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அச்சங்கத்தினா், பின்னா் சிறிது தூரம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா், மறியலில் ஈடுபட்ட சிஐடியு மாவட்டத் தலைவா் கே.கிருஷ்ணன், மாவட்டச் செயலா் பி.துரைசாமி, மாவட்ட துணைத் தலைவா் ஆா்.சிற்றம்பலம், பொருளாளா் கே.கண்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் அருண்குமாா் உள்ளிட்ட 42 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com