கொலை வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கொலை வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கொலை வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருமானூா் அருகேயுள்ள கண்டிராதித்தம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் அா்ஜூன்ராஜ் (34). இவா் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 16.5.2024 அன்று ஏலாக்குறிச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருமானூா் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ராஜீவ்காந்தி தலைமையிலான காவல் துறையினா், அா்ஜூன்ராஜை கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி உத்தரவிட்டதையடுத்து, அா்ஜூன்ராஜை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com