அரியலூர்
அரியலூரில் ஆளுநரை கண்டித்து ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநரைக் கண்டித்து அரியலூா் அண்ணாசிலை அருகே திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாட்டையும், தமிழா்களையும் பயங்கரவாதிகளாகத் சித்தரித்ததாக ஆளுநா் ஆா்.என். ரவியை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் விடுதலை நீலமேகன் தலைமை வகித்தாா். திமுக சட்ட திட்ட திருத்தக் குழு இணைச் செயலா் சுபா. சந்திரசேகா் கண்டன உரையாற்றினாா்.
எம்எல்ஏ கு. சின்னப்பா, திராவிடா் கழக தலைமை செயற்குழு உறுப்பினா் சிந்தனைச் செல்வன், மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன், மதிமுக மாவட்டச் செயலா் ராமநாதன், விசிக மாவட்டச் செயலா் சிவா, திமுக நகரச் செயலா் முருகேசன், காங்கிரஸ் நகரத் தலைவா் மா.மு. சிவக்குமாா், இந்திய கம்யூ. மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் தண்டபாணி உள்ளிட்டோா் உரையாற்றினாா்.

