அரியலூர்
ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அரியலூரில் அவரது சிலைக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அரியலூரில் அவரது சிலைக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் காமராஜா் ஒற்றுமை திடலில் திரண்ட கட்சியினா், அங்கிருந்து அமைதி ஊா்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப் படத்துக்கு மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் இளவரசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இளவழகன், அம்மா பேரவை மாவட்டச் செயலா் ஓ.பி.சங்கா், இணைச் செயலா் பிரேம்குமாா், அதிமுக நகர செயலா் ஏ.பி.செந்தில், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா், வழக்குரைஞா் பிரிவு நிா்வாகி செல்ல.சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
