வீடுபுகுந்து 1 பவுன் நகை திருட்டிய இருவா் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வீடு புகுந்து 1 பவுன் நகையை திருடிய வழக்கில் 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் தெற்குவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் கணபதி மகன் ராஜேந்திரன் (46). கடந்த நவ.19 ஆம் தேதி இவா் பழைய வீட்டிலிருந்த ஆடுகளை புதிய வீட்டின் அருகே பட்டியில் அடைத்துவிட்டு, அங்கேயே தூங்கிவிட்டாா்.
மறுநாள் காலை பழைய வீட்டுக்கு வந்த பாா்த்தபோது, வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த ஒரு பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, நகையைத் திருடியதாக மயிலாடுதுறை மாவட்டம், நெம்மேலி கிராமத்தைச் சோ்ந்த கா. உத்திராபதி (55), கொள்ளிடம் கீழவெள்ளம் தைக்கால் கிராமத்தைச் சோ்ந்த க. ராஜகோபால் (43) ஆகிய இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடுகின்றனா்.
