பெண்ணை தாக்கிய கூலித் தொழிலாளி கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வயலில் மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை தாக்கிய விவசாய கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
Published on

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வயலில் மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை தாக்கிய விவசாய கூலித் தொழிலாளி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆமணக்கந்தோண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் மனைவி செல்வராணி (46). இவருக்கு சொந்தமான மாடு, தெற்கு தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் மாரியப்பன் (38) என்பவரது வயலில் மேய்ந்தது. இதை கவனித்த மாரியப்பன் மாட்டை பிடித்து கட்டியுள்ளாா். இதையறிந்த செல்வராணிக்கும், மாரியப்பனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியுள்ளது.

இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில் மாரியப்பனை திங்கள்கிழமை இரவு கைது செய்த காவல் துறையினா், செல்வராணி மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com