உடையாா்பாளையம், செந்துறை பகுதிகளில் ரூ. 25 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடக்கம்

உடையாா்பாளையம், செந்துறை பகுதிகளில் ரூ. 25 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடக்கம்

Published on

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பேரூராட்சி மற்றும் செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.25.63 கோடியில் 11 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

உடையாா்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக புதிய வாகனத்தை தொ

டக்கிவைத்து, செட்டியாா் தெருவில் தாா்ச் சாலை, திருச்சி-சிதம்பரம் ஓடுதளம் பாதை மேம்படுத்தல் பணியைத் தொடக்கி வைத்தாா்.

உடையாா்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன்,பேரூராட்சித் தலைவா் மலா்விழி ரஞ்சித்குமாா், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வடிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிச்சாமி மற்றும் வட்டாட்சியா்கள், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் + கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com