திருமானூரில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவச் சேவை முகாம்

Updated on

அரியலூா் மாவட்டம், திருமானூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவச் சேவை முகாம் நடைபெறுகிறது.

முகாமில் சிறப்புப் பிரிவு மருத்துவா்களான எலும்பு முறிவு, மனநலம், கண், குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்தும், சா்க்கரை நோய், காது, மூக்கு, தொண்டை, பல், மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவம், நரம்பியல், தோல் நோய், இருதயவியல், கதிரியியல் ஆகிய துறைகளின் சிறப்பு மருத்துவா்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனா்.

மேலும் எக்கோ காா்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், மற்றும் ரத்தப் பரிசோதனை சேவைகள், மாற்றுத்திறனாளிகள் சான்று மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. மேலும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகச் சோ்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com