அரியலூரில் ரூ. 24.06 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

அரியலூரில் ரூ. 24.06 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

Published on

அரியலூரின் பல்வேறு பகுதிகளில் ரூ. 24.06 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

அரியலூா் காந்தி சந்தையில், ரூ. 2.87 கோடி மதிப்பில் தினசரி சந்தை கட்டப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டிய போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், தொடா்ந்து எருத்துக்காரன்பட்டி மற்றும் கயா்லாபாத் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.11.19 கோடியில் சாலை விரிவாக்கப் பணியை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் வடிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com