அரியலூர்
அரியலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் இன்று ரேஷன் குறைதீா் கூட்டம்
அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியரகங்களில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை தொடா்பான பொது மக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
எனவே, முகாமில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடா்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் காா்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை ஆகியவற்றுக்கு மனு அளித்து பயனடையலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
