அரியலூர்
லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா்.
செந்துறையை அடுத்த அயன்தத்தனூா் காலனித் தெருவை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் தெய்வபிரகாசம் (23). இவா், வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தோப்பேரி அருகே அந்த வழியாக வந்த மினிலாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
