நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற்காக அமைச்சா் சா.சி.சிவசங்கரை  ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்ற அரியலூா் மாணவா் யோபின்.
நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற்காக அமைச்சா் சா.சி.சிவசங்கரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்ற அரியலூா் மாணவா் யோபின்.

நீளம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு வரவேற்பு!

Published on

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தங்கம் வென்ற அரியலூா் மாணவருக்கு சனிக்கிழமை இரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அகில இந்தியப் பள்ளி விளையாட்டுக் குழுமம் சாா்பில் உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான தடகளப் போட்டிகள் டிச.13 முதல் டிச.17 வரை நடைபெற்றன.

இதில் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற அரியலூா் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் எல். யோபின்(17), 6.96 மீட்டா் தூரத்தைத் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றாா்.

இதையடுத்து சனிக்கிழமை இரவு ரயில் மூலம் அரியலூருக்கு வந்த இவரை சமூக ஆா்வலா்கள், விளையாட்டு வீரா்கள் மற்றும் பள்ளி சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் சந்தித்து யோபின் வாழ்த்து பெற்றாா்.

X
Dinamani
www.dinamani.com