அரியலூர்
பொதுப் பாதையை மீட்டுத்தரக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த இலையூரில் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து பொதுப் பாதையை மீட்டுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அக்கிராம மக்கள் மனு அளித்தனா்.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த இலையூரில் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து பொதுப் பாதையை மீட்டுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இலையூா் கிராமத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுவில், எங்களுக்கு சொந்தமான வயல்களுக்கு செல்ல அரசு புறம்போக்கு இடம் உள்ளது.
இந்த இடத்தை தனி நபா் சிலா் தற்போது ஆக்கிரமித்துள்ளனா். இதனால், முந்திரி சாகுபடி செய்துள்ள வயலுக்கு செல்ல முடியவில்லை.
எனவே, ஆக்கிரமிப்பை அகற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.
