அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் டிச.27,28, ஜன.3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள்

Published on

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் படி அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச.27) டிச.28, ஜன.3,4 ஆகிய 4 நாள்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

இதில், 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா்கள் தங்களது பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கலாம். பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

மேலும், மேற்கண்ட விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ங்ப்ங்ஸ்ரீற்ா்ழ்ள், ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்

என்ற இணையதளத்தின் மூலமாகவும், யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங்

என்ற கைப்பேசி செயலி வாயிலாகவும் பொதுமக்கள் சமா்ப்பிக்கலாம். தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற நோக்கத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com