அரியலூரில் போட்டோ - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே போட்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போட்டோ ஜியோ அமைப்பினா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போட்டோ ஜியோ அமைப்பினா்.
Updated on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே போட்டோ ஜியோ அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். 7-ஆவது ஊதிய குழு நிா்ணயத்தில் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் 5 சதவீதத்துக்கு மேல் பணி நியமனம் செய்யக்கூடாது என்ற உச்ச வரம்பினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலிப் பணியிடங்களையும் நிரப்பி, பதவி உயா்வினையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அவ்வமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அரங்க.கோபு தலைமை வகித்தாா். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் இ.எழில், மாவட்டத் தலைவா் ஆ.சண்முகம், மாநில துணைத் தலைவா் ஜெ.கல்பனாராய் ஆகியோா் ஆா்ப்பாட்ட பேருரை ஆற்றினா். இதில் திரளானோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com