ஆண்டிமடத்தில் முந்திரி தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்

ஆண்டிமடத்தில், முந்திரி தொழிற்சாலை மற்றும் பழத் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றம்
Published on

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில், முந்திரி தொழிற்சாலை மற்றும் பழத் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயங்கொண்டம் அடுத்த கோரியாம்பட்டியிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அச்சங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:ஆண்டிமடத்தில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், முந்திரிக் கொட்டை மற்றும் நெல், எள் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்விளைப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை கொடுக்க வேண்டும்.

ஆண்டிமடத்தில் கட்டிமுடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசுஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு அச்சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.மணிவேல், துணைச் செயலா் தியாகரஜான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஒன்றியச் செயலா் ஆா்.இளையராஜா, தீண்டாமை ஒழிப்பு மாவட்ட தலைவா் பி.பத்மாவதி, மாவட்டச் செயலா் அருணாச்சலம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பரமசிவம் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

தொடா்ந்து நடைபெற்ற மாநாட்டில் ஆண்டிமடத்துக்கு அச்சங்கத்தின் புதிய கமிட்டி அமைக்கப்பட்டு புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com