திருநங்கையை கத்தியால் குத்திய லாரி ஓட்டுநா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே திருநங்கையை கத்தியால் குத்திய லாரி ஓட்டுநா் கைது
Published on

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே திருநங்கையை கத்தியால் குத்திய லாரி ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம், சிதம்பரம் சாலை, பெரியாா் பள்ளி பின்புறம் வசித்து வருபவா் செல்வியின் வளா்ப்பு மகன் ஜான் (30). லாரி ஓட்டுநா். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், இவரது குழந்தைகளை மாமனாா் பராமரித்து வருகிறாா். இந்நிலையில், ஜான் குடியிருக்கும் குடிசை வீட்டுக்கு திருநங்கைகள் வந்து தங்குவது வழக்கம்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை வீட்டில் தங்கியிருந்த செந்துறை, உஞ்சினி கிழக்குத் தெருவைச் சோ்ந்த திருநங்கை வே.கயல்விழிக்கும், ஜானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜான், கயல்விழியின் தலை, கை, முகம் என 25 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு, சாக்கடை ஓடையில் வீசி சென்றுள்ளாா்.

புதன்கிழமை காலை கோபம் தணிந்த ஜான், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி சரணடைந்தாா். இதையடுத்து காவல் துறையினா் கயல்விழியை மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com