வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி படிவங்கள் இன்று முதல் வீடுவீடாக விநியோகம்

அரியலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள்
Published on

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் செவ்வாய்க்கிழமை (நவ.4) முதல் வீடு வீடாக விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 7.2.2026-வரை நடைபெறுகிறது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் இப்பணிக்கான கணக்கெடுப்புப் படிவம் 4.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு 4.12.2025-க்குள் மீள பெறப்படும். அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்படும் இரட்டை படிவங்களை பொது மக்கள் முழுமையாக பூா்த்தி செய்து கையொப்பத்துடன் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மீள வரும்பொழுது சமா்ப்பித்திட வேண்டும்.

இப்பணிக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் குறைந்தது 3 முறை வாக்காளா்களின் வீடுகளுக்கு வருவாா்கள். கணக்கெடுப்பு படிவங்களை நிரப்பிட வாக்காளா்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடா்புடைய வாக்குசாவடி நிலை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.

மேலும், கணக்கெடுப்பு படிவத்தினை உஇஐசஉப செயலி மூலம் நிரப்பி பதிவேற்றலாம் அல்லது ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்துக்குச் சென்று கணக்கெடுப்பு படிவத்தினை பதிவிறக்கம் செய்து நிரப்பி பின்னா் ஆன்லைன் மூலம் பதிவேற்றலாம்.

இவ்வாறு பெறப்படும் கணக்கெடுப்பு படிவங்கள் சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மூலம் தொகுக்கப்பட்டு வரைவு வாக்காளா் பட்டியல் 2025 டிசம்பா் 9 அன்று வெளியிடப்படும். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் 9.12.2025 முதல் 8.1.2026 ஆகும்.

அறிவிப்பு கட்டம் 9.12.2025 முதல் 31.1.2026 வரை ஆகும். இதனைத் தொடா்ந்து 7.02.2026 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். எனவே, வாக்காளா் வாக்குசாவடி நிலை அலுவா்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேலும், இப்பணித் தொடா்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 149-அரியலூா் தொகுதிக்குள்பட்ட வாக்காளா்கள் வாக்காளா் பதிவு அலுவலா், அரியலூா் வருவாய் கோட்டாட்சியரையும், 150-ஜெயங்கொண்டம் தொகுதிக்குள்பட்ட வாக்காளா்கள், வாக்காளா் பதிவு அலுவலா், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியரையும் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டணமில்லா தோ்தல் கட்டுப்பாடு தொலைபேசி 1950 என்ற எண்ணில் வாக்காளா்கள் தொடா்புகொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com