அரியலூரில் கோட்டாட்சியா் பிரேமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடா்பான கூட்டம்.
அரியலூரில் கோட்டாட்சியா் பிரேமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடா்பான கூட்டம்.

அரியலூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனைக் கூட்டம்

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் அரியலூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் பட்டியல்
Published on

அரியலூா்: அரியலூரிலுள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் அரியலூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக, தேசிய மற்றும் மாநில கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோட்டாட்சியா் பிரேமி தலைமை வகித்து, வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடா்பான கேள்விகளுக்கு பதிலளித்தாா். இதில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக என பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, திருத்தம் தொடா்பாக விளக்கங்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டனா்.

மேலும், இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் இந்த வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை ஆதரிப்பதாக தெரிவித்தனா்.

நிகழ்வில் வட்டாட்சியா் முத்துலட்சுமி மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com