மல்லூா் கிராமத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கணக்கெடுப்புப் படிவம் வழங்கப்பட்டு வருவதை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி.
மல்லூா் கிராமத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கணக்கெடுப்புப் படிவம் வழங்கப்பட்டு வருவதை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

எஸ்.ஐ.ஆா் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் தொடங்கியது

Published on

அரியலூா் மாவட்டத்தில், அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில், வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில்,அரியலூா் தொகுதிக்குட்பட்ட, பாகம் எண்.102 - கருப்பூா்சேனாபதி 133 - வாரணவாசி, 134 - மல்லூா் ஆகிய கிராமங்களில், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் கணக்கெடுப்புப் படிவம் வழங்கப்பட்டு வருவதை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் தெரிவிக்கையில், மாவட்டத்தில் தொடங்கியுள்ள வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் மற்றும் கணக்கெடுப்புப் பணியில் 596 வாக்குசாவடி நிலை அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதனை மேற்பாா்வையிட 10 வாக்குசாவடி நிலை அலுவலா்களுக்கு ஒருவா் வீதம் 60 மேற்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இப்பணியினை சம்மந்தப்பட்ட உதவி வாக்காளா் பதிவு அலுவலா், வருவாய் வட்டாட்சியா்களும், வாக்காளா் பதிவு அலுவலா், வருவாய் கோட்டாட்சியா்களும் கண்காணிப்பாா்கள் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி, வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com