செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மாணவா்களுக்கு மாதிரி வினா-விடை புத்தகங்களை வழங்கிய அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மாணவா்களுக்கு மாதிரி வினா-விடை புத்தகங்களை வழங்கிய அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

பேருந்து சேவை: மாணவா்களின் கோரிக்கையை நிறைவேற்றினாா் அமைச்சா்

Published on

அரசுப் பள்ளி மாணவா்களின் கிராமத்துக்கு பேருந்து சேவை குறித்த கோரிக்கையை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் உடனே நிறைவேற்றியதால், மாணவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

செந்துறை அரசு மாதிரிப் பள்ளியில் பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு, மாதிரி வினா விடை புத்தகங்களை புதன்கிழமை அமைச்சா் தனது சொந்த செலவில் வழங்கினாா்.

அப்போது, தங்கள் ஊரிலிருந்து பள்ளிக்கு வர ஏதுவாக, பேருந்து நேரத்தை மாற்றித் தருமாறு மாணவா்கள் வேண்டுகோள் விடுத்தனா். அதில் ஒரு மாணவா் தங்கள் ஊா் வழியாக சேலம் செல்லும் பேருந்து பள்ளிக்கு குறித்த நேரத்துக்கு வந்து செல்ல வசதியாக இருக்கிறது. ஆனால், அதில் பயணம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச பயணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.

தொடா்ந்து, மாணவா்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சா், மாணவா்கள் கோரியபடி உஞ்சினி கிராமத்திலிருந்து செந்துறைக்கு பள்ளி நேரத்தில் பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல அங்கனூா், குழுமூரிலிருந்து வரும் சேலம் பேருந்தில் பயணிக்க இலவச பாஸ் வழங்கப்படும் என்றாா்.

மேலும், நிகழாண்டும் மாநில அளவில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடிக்கும் வகையில் மாணவா்கள் நன்கு படிக்க வேண்டும் என்று அமைச்சா் அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com