தனித்துவ அடையாள எண் பெற பி.எம்.கிசான் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பி.எம். கிசான் பயனாளிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
Published on

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பி.எம். கிசான் பயனாளிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது: வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் நில உடைமைகளை உள்ளடக்கிய விவசாயிகளின் தரவுகளை சேகரிப்பதற்கு பிரத்யேகமான விவசாயிகள் பதிவேடு செயலி (ஙா்க்ஷண்ப்ங் அல்ல்) உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகளை சரிபாா்த்து விவசாயிகளுக்கென தனித்துவமான அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத் துறை சாா்ந்த கள அலுவலா்கள் கிராமங்களுக்கு வந்து விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் மொத்தம் 1,32,231 விவசாயிகள் உள்ளனா். பிரதமரின் கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 69,026 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனா். இதில் விவசாயிகள் பதிவேடு திட்டத்தில் இதுவரை பிரதமரின் கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் 51,365 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். எஞ்சிய 17,661 விவசாயிகள் பதிவு செய்யவில்லை. விவசாயிகளில் 84,390 போ் மட்டுமே பதிவு செய்துள்ளனா்.

எனவே, விவசாயிகள் அனைவரும் உடனடியாக தங்கள் நில உடைமை விவரங்களை பதிவேற்றம் செய்து, விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் பெற வேண்டியது அவசியமாக உள்ளது.

இவ்வாறு பதிவு செய்து பெறப்படும் தனித்துவ விவசாயி அடையாள எண் மூலம் இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பயன்களை பெற முடியும்.

எனவே, விவசாயிகள் தங்களுடைய கணினி சிட்டா, ஆதாா் எண், கைப்பேசி ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் வரும் 15.11.2025 தேதிக்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com